Welcome!


பூப்பறித்து பழக்கமில்லை..

3:16 PM Posted In Edit This 3 Comments »


சிரித்துக்கொண்டே வாடிப்போன
நேற்றைய பூக்களின்
விலாசத்தை தாங்கிக்கொண்டு
இன்றைய அரும்புகள்!

* * * *

காலமாற்றத்தில்
மாறாத கால்த்தடங்களில்
உருவாக்கப்பட்ட பூவாசங்கள்!

* * * *

எனக்காக பூக்கின்றன
பூக்கள்!
அவர்களுக்காய்
நானும் எனது புன்னைகையும்
எனது சில கவிதைகளும்!

* * * *

கூடைகளில்
பூ நிரப்பி பழக்கமில்லை
நுரையீரலில் மட்டும்
வாசங்கள்!

* * * *

பூஜையறையில்
ஆண்டவனிடமும் சொல்லிவிட்டேன்
பூப்பறிப்பு என் பழக்கமில்லை
பூவாசம் வேண்டுமென்றால்
எழுந்து வா தோட்டத்திற்கு!

* * * *

3 comments:

Anonymous said...

பூஜையறையில்
ஆண்டவனிடமும் சொல்லிவிட்டேன்
பூப்பறிப்பு என் பழக்கமில்லை
பூவாசம் வேண்டுமென்றால்
எழுந்து வா தோட்டத்திற்கு!

உங்கள் கவிதைகள் மிகவும் அழகாக இருக்கின்றது. அதிலும் இந்த வரிகளின் மூலம் இயற்கையின் மேல் நீங்கள் வைத்துள்ள பற்று நன்றாகத் தெரிகின்றது.

கோகுலன் said...

நன்றீங்க தமிழ்..

உங்களின் பெயர் நல்ல தெர்ரிவு.. தமிழ்பிரியை..

கோகுலன் said...

மன்னிக்கனும்...

உங்களின் பெயர் நல்ல தேர்வு.. தமிழ்பிரியை..