Welcome!


அரவாணி

11:27 PM Posted In Edit This 5 Comments »
ஆண்டவன் தொடுத்த மாலையிலே
உதிரிப்பூக்கள் நாங்கள்தாம்
அவனே படைத்த புத்தகத்தில்
அச்சுப்பிழைகள் நாங்கள்தாம்

உதிர்ந்த பூவுக்கும் மணமுண்டு
எங்களுக்கும் ஓர் மனமுண்டு
அதனைப் புரிந்து நட்புடனே
புன்னகை புரிந்திட யாருண்டு?

அருமை அண்ணன் ச்சீ என்றான்
அன்பு அப்பா போ என்றார்
அலறித் துடித்து அம்மா மட்டும்
ஆண்டவனிடத்தில் ஏன் என்றாள்

ஏளனப் பார்வையும் கிண்டல்களும்
எவ்விடமிருந்தும் வருகிறதே
ஏக்கப்பார்வையை எங்கள் முகத்தில்
எத்தனை நாள்தான் வைத்திருப்போம்?

அடிப்படை உரிமைகள் எமக்கில்லை
அங்கீகாரங்கள் எதுவுமில்லை
வறுமைப் பிடியில் தவிக்கின்றோம் எங்கள்
திறமையை யாரும் பார்ப்பதில்லை

தேவை உங்கள் பிச்சையல்ல
பாலியல் தொழிலும் தேவையல்ல
திறமை கண்டே மதித்திடுக
நட்புடன் புன்னகை செய்திடுக

தனிநாடு எதுவும் கேட்கவில்லை
ஆட்சியில் பங்கும் கேட்கவில்லை
அடிப்படை உரிமைகள் மட்டேனும்
அன்புடன் எமக்கு தந்திடுக.

5 comments:

Unknown said...

Wonderful lines......... Really its touching .... keep it up dude ...

கோகுலன் said...

Thanks Vijayan.

abi said...

wonderfull gokulan...

கோகுலன் said...

thanks Abi..

cheena (சீனா) said...

கோகுலன், திருநங்கைகளைப் பற்றிய ஆதங்கம், மனக்கவலை புரிகிறது.சீக்கிரம் மாற வேண்டும் அவர்களது நிலை. மாறும் ஒரு நாள்.