Welcome!


புதுமைப்பெண்?

8:20 PM Posted In Edit This 1 Comment »
தலமேல மண்சட்டி வயித்துக்குள்ள பொட்டப்புள்ள
இப்படித்தான் நானிருக்கேன் எறத்தாழ அஞ்சுவருசம்
பெத்த வீட்டுலயும் பவுசாத்தான் நானிருந்தேன்
தாலி வாங்கும்போதே தலயெழுத்தும் மாறிடுச்சு

கைபுடுச்ச பொண்டுப்பய மேஸ்திரின்னு சொல்லிக்குவான்
காசுபணம் சேந்துப்புட்டா சீட்டாடித் தோத்துடுவான்
அஞ்சுரூவா பத்துரூவா செங்கச்சுமந்து கொண்டுபோனா
அதயும் புடுங்கிக்கிட்டு சாராயம் குடிச்சிருவான்

வக்கனையா பெத்தாச்சு மொத்தம் நாலுபுள்ள
பசிக்கு அழும்போது கஞ்சிகுடுக்காட்டி பாவமில்ல?
கல்லுடைக்க மண்சுமக்க உடம்புல தெம்பிருக்கு - அவன்
காசவந்து புடுங்கும்போது போராட தெம்புயில்ல

புள்ளைக்கு மனசுரொம்ப சோறுபோட்டு நாளாச்சு
தினமும் சாப்பாடோ கவர்மெண்ட் சத்துணவு
பாவிப்பய இவன்மட்டும் எங்காசும் புடுங்கிப்போயி
தினமும் குடிச்சுப்புட்டு என்னயப்போட்டு அடிக்கிறான்

இன்னைக்கி ஜெயிச்சுட்டேன் புள்ளைக்கெல்லாம் சுடுசோறு
வயிறார சாப்பிட்டுட்டு சீக்கிரமா தூங்குங்கடி
மனசார முடிவெடுத்தேன் புருசன் எனக்கு வேணாம்ணு
மாரியாத்தா மன்னிச்சுக்கோ அவன்சோத்துல விஷமிருக்கு.

1 comments:

M.Rishan Shareef said...

கிராமத்துக் கவிதையாக நீங்கள் எழுதியிருக்கும் கவிதையிது ஒரு பெண்ணின் வாழ்க்கை மட்டுமில்லை கோகுலன்.

மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.. :)