Welcome!


வெறுமைகளின் பயணம்

3:18 PM Edit This 7 Comments »


நான் எங்கிருந்து வந்தேனென நீயும்
நீ எங்கிருந்து வந்தாயென நானும்
யாரை யார் தொடர்ந்தோமென இருவரும்
அறிந்திராதவொரு மழைச்சாரல் பொழுதில்
காடூடுறுவும் சிறுபாதையொன்றை
அழகாய்ப் பகிர்ந்திருந்தது
கைகள் கோர்த்த நம் நடை!

உன் சாயல்கொண்ட
இன்னும் பிறந்திரா என் குழந்தை
சாரலில் நனைந்தோடி பூக்கள் பறிந்தது
தூரத்தில் இரைச்சலிட்ட காட்டாறும்
மென் கருமை பூசியிருந்த மாலைகளும்
நம் களிப்பிற்குச் சாட்சியாயிருந்தன
இவ்வுலகின் பாதையைக் காணாத வரையிலும்
நம் பயணங்கள் பிரிந்திருந்ததை
நாம் அறிந்திருக்கவில்லை

பாரமான இலையுதிர்காலத்தின் நேரம்
நினைவுகளைச் சுருட்டி பிரிந்தோம்
சிநேகம் தொலைந்த வாழ்க்கை வழிகளில்
வெறுமைநோக்கி
வேகமாய் நடந்தபடியிருக்கின்றன கால்கள்!

7 comments:

ஆ.சுதா said...

கவிதை நன்று...

தமிழ் said...

/நான் எங்கிருந்து வந்தேனென நீயும்
நீ எங்கிருந்து வந்தாயென நானும்
யாரை யார் தொடர்ந்தோமென இருவரும்
அறிந்திராதவொரு மழைச்சாரல் பொழுதில்/

அருமையான வரிகள்

Divya said...

கவிதை வரிகள் அனைத்தும் மிகவும் அருமை!!

Divya said...

\\இன்னும் பிறந்திரா என் குழந்தை
சாரலில் நனைந்தோடி பூக்கள் பறிந்தது\\



பூக்கள் 'பறித்தது' என்று வருமோ??

பறிந்தது என்றால் என்ன??

Natchathraa said...

இந்த கவிதை ஒருமுறை எனக்கு நீங்கள் வாசித்துக்காட்டிய கவிதை தானே கண்ணா??

சிறு மாற்றங்கள் செய்திருக்கிறீர்களென நினைக்கிறேன்...

இப்போது இன்னும் கொஞ்சம் அழகு கூடியிருக்கிறது....

மழை, குழந்தை, காட்டாறு, பூக்கள், மரங்கள்... இயற்கையின் அத்தனை அழகும் உங்கள் கவிதையில்...

//*உன்* சாயல்கொண்ட
இன்னும் பிறந்திரா *என்* குழந்தை//

நம் குழந்தை என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பது அழகு...

வாழ்த்துகள் தோழா....

கோகுலன் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்ரி நண்பரே முத்து ராமலிங்கம்!

கோகுலன் said...

மிக்க நன்றிகள் திகழ்மிளிர், திவா, நட்சத்ரா!!