நீ வரப்போவதில்லையென
7:27 AM Posted In திண்ணை Edit This 9 Comments »இலையுதிர்க்கால முற்றத்தில்
குவிந்து கிடக்கின்ற சருகுகளினூடாக
வசந்தத்தின் பழைய பாடல்களை
தேடிக்கொண்டிருக்கிறேன்
கடந்துசென்ற சுழிக்காற்றைப் பற்றியபடி
தூரமாய் விலகிச் சென்றிருக்கிறது உன் நேசம்
உன் அண்மையற்ற முன்னிரவுப் பொழுதொன்றில்
நினைவுகள் இறைந்து கிடக்கும் குளக்கரையின்
அதிரத் தளும்பும் அலைகளினூடாக
உடைந்த நிலவை கரங்குழித்து அள்ளுகிறேன்
விரலிடுக்கில் ஒழுகுகிறது வெறுமை
அதிகாலைக் கனவொன்றில்
அறைச்சுவரின் சட்டங்களுக்குள் பொறிக்கப்பட்ட
உன் புன்னகையேந்திய முகம் தூர்ந்துதிர
ஆழ் உறக்கத்தின் நடுவிலும்
உனை அணைத்துக்கொள்வதற்கென
சட்டென நீண்ட கரங்களுக்குத் தெரியவில்லை
இனி என்றும் நீ வரப்போவதில்லையென!
9 comments:
ரொம்ப அழகாக எழுதுகிறீர்கள் கோகுலன்.
அன்புடன் அருணா
கவிதை மிக அருமை ..உங்களுக்கே உரிய தனித்துவும் கவிதையில் ...
மிகவும் ரசித்தேன் ....
வெறுமையை சொன்ன விதம் மிக அருமை ....
மொத்தத்தில் நல்ல கவிதை படித்த திருப்தி மனதில் ......
அன்புடன்
விஷ்ணு
மனசுக்கு நெருக்கமா இருக்குங்க்னா..
உங்கள் மொழி அழகு. நல்லா இருக்கு.
அனுஜன்யா
//ரொம்ப அழகாக எழுதுகிறீர்கள் கோகுலன்.
அன்புடன் அருணா/
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் அருணா..
//கவிதை மிக அருமை ..உங்களுக்கே உரிய தனித்துவும் கவிதையில் ...
மிகவும் ரசித்தேன் ....
வெறுமையை சொன்ன விதம் மிக அருமை ....
மொத்தத்தில் நல்ல கவிதை படித்த திருப்தி மனதில் ......
//
அன்பு நண்பரே விஷ்ணு..
தங்கள் மேலான பின்ன்னூட்டத்தில் மிக்க மகிழ்ச்சி.. நன்றிகள்..
தங்கள்ளின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி அனுஜன்யா..
//மனசுக்கு நெருக்கமா இருக்குங்க்னா..//
கருத்துக்கு மிக்க நன்றி நண்பா சரவணன்..
இனிய கவிதை ..எல்லோர் இதயத்திலும் இடம் பெறும்.
Post a Comment