Welcome!


32 கேள்விகளும் எனது பதில்களும்..

12:46 PM Edit This 9 Comments »


என்னை தொடர் பதிவிற்கு அழைத்த அன்பு நண்பன் சகபதிவர், ஒளியவன் பாஸ்கருக்கு மிக்க நன்றி..
எனது பதில்கள் இனி ...

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
நானே எனக்கு வைத்துக்கொண்ட பெயரிது. எனக்கு கண்ணனை மிகவும் பிடித்தவன். கோகுலமும் அங்கே நடக்கும் ராசலீலையும் பிடிக்கும்.. ( தயவுசெய்து ராசலீலையின் உண்மையான அர்த்தம் தேடிப்புரியவும்..:))
என் பெயர் எனக்கு பிடிக்குமா: சொந்தபெயர் பூமாரி அந்தோணிராஜ். ஆரம்பத்தில் பூமாரி என்ற பெயர் அதிகம் பிடிக்காமல் இருந்தது. ஆனால் எப்பொழுதுமே என்னைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் அப்பெயரை கொண்டாடியே வருகிறார்கள். இப்பொழுது பல நண்பர்களின் வேண்டுதலுக்கிணங்க பூமாரி என்ற என் சொந்த பெயரிலும் ஆங்கில, தமிழ் கவிதைகள் எழுதுகிறேன்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இரண்டு மாதங்களுக்கு முன். (மனிதர்கள் முன் பொதுவாக நான் அழுவதில்லை.. இருப்பினும் இப்படியொரு சில தவிர்க்க இயலாமல் போகிறது )
அது தவிர சர்ச், கோவில் சந்திதானங்களில் அழுகையை என்னால் அடக்க முடியாது. மேலும் அவ்விடங்களுக்கு வெகு தனியாகச் செல்வதே வழக்கம்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடித்திருக்கிறது.

4.பிடித்த மதிய உணவு என்ன?
காரமில்லாத எந்த சைவ உணவு ஆனாலும் சரி..
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் சாதம் பாசிப்பருப்புக் கூட்டு, கேரட் பொரியல், கீரை, பால்சோறு மற்றும் வறுத்த சுண்டை வத்தல் / மோர்மிளகாய்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
முதலில் தயங்குவேன். பழக ஆரம்பித்துவிட்டால் மிகவும் நன்றாக பழகுவேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவிதான்.. அதும் மதிய வெயிலில் யாருமற்ற அருவியில் .. அட அட..
கேள்வியில் ஆற்றையும் சேர்த்திருக்கலாம். தாமிரபரணி நாட்கள் வாழ்வில் மறக்க முடியாதவை.
தற்சமயம் வீட்டு நீச்சல்குளத்தில் இரவுகளில் நீந்தி சோர்வது மிகவும் பிடித்திருக்கிறது..

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பொதுவாக பேச்சு.. கவனம்.. பந்தாவற்ற எளிமை..
நேருக்கு நேர் பேசும்போது, கண்கள்.. மற்றும் கண்முடிகள்.. சிகை அலங்காரம் கவனிப்பேன்..
வளைந்த கண்முடிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. கண்களில் / முகத்தில் அழகே அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பது என் எண்ணம்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
ரொம்ப பிடித்த விசயம்னா, கொஞ்சம் பயின்றிருக்கும் / பயின்று கொண்டிருக்கும் யோகம் / தியானம்
பிடிக்காதது : பிடிக்காத விசயம்னு தெரிஞ்சபிறகு, அத ஏந்தான் கூட வச்சுக்கணும்? திருத்தணும், அது திருந்தவே திருந்தாதுன்னா விட்டுடணும்.. சரிதாணுங்களே..

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
சரிபாதியையே இப்பத்தான் கண்டுபிடிச்சிருக்கேன். மேற்படி இனிமே தான் கண்டுபிடிக்கணும்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
என் பக்கத்துல யாரும் இல்லாததுக்காக எப்பவுமே வருந்துறதில்லை. உலகத்துல வரும்போதும் தனியாத்தான் வந்தோம்.. போகும் போதும் அப்படித்தானுங்களே.
இக்காலத்தில் உடல்நிலை சரியில்லாத அம்மா பக்கத்துல நான் இருக்க முடியலைன்னுதான் கொஞ்சம் வருத்தம். அதும் அடுத்த கொஞ்சநாள்ள தீரப்போகுது.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
இங்கே பின்னிரவு.. அணிந்திருக்கும் இரவாடையில் ஆறு வண்ணங்கள் இருக்கின்றன. அதில் அதிகமானது சிகப்பு.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
இப்போதைக்கு பாடல் கேக்கல.. சுமார் 2 மணி நேரம் முன்பு நள்ளிரவில் கேட்ட கடைசி பாடலற்ற இசை 'White Mountain' - By Isha Yoga.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு.. அதிலும் வழுக்கிக்கொண்டு எழுதும் கருப்பு பேனா. :)

14.பிடித்த மணம்?
நிறைய இருக்கு..
தாளிக்கும் வாசனை, மண்வாசனை, பெட்ரோல் வாசனை, நீலகிரி தைல வாசனை, கோவிலின் பூவும் கற்பூரமும் சேர்ந்து மணக்குமே அது, பூக்களில் மல்லிகை, லாவண்டர், ..

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

நளன் (குட்டி செல்வன்) : இணைய தோழன், கவிஞன், சகபதிவர், உடன்பிறவாத்தம்பி, நான் சென்னையில் வந்திறங்கியது தெரிந்தும் அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லிவட்டு ஓடிவந்தவன்.
பிடித்த விசயம் அவன் எழுத்து மற்றும் உணர்வு வெளிப்பாடு.. சிறு குழந்தைபோல் அழுவதும் அடுத்த கணமே நட்சத்திரங்களில் தாவித்தாவி விளையாடும் குழந்தைமையும் பிடிக்கும். அவனோடு பேசும் போதெல்லாம் நானும் குழந்தையாகவே மாறியிருக்கிறேன்.

மீறான் அன்வர் : இந்தியா செல்லும்போதெல்லாம் சந்திக்க வேண்டுமென நினைத்து முடியாமல் போன எங்கள் ஊர் நண்பர். ஒருவர் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் ஆனந்தமாகவே இருக்கமுடியும் என்றால் அது நண்பர் மீறான் அன்வர் தான்.. எப்பொழுதும் பேச்சில் ஒரு துள்ளல் இருக்கும். அவர் இயற்கையை பார்க்கும் / கண்ணோட்டம் மிக அலாதியானது. ஒரு சிறு பூவினையும் நின்று ரசிக்க அவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். குற்றாலமலைச் சாரலின் சொந்தக்காரர். அன்பு நண்பர், சக பதிவர். கவிஞர். :)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
ஒன்றல்ல.. நிறைய இருக்கிறது. அவரது கவிதைகள் மிகவும் பிடிக்கும். அதிலும் சமீபமாக வரும் கவிதைகளின் நடையும் மொழியும் கருத்தாழமும் என்னை மிகக் கவர்ந்தவை.அவரது உரையாடல்: சமூக இலக்கிய அமைப்பு போட்டிச் சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது..

17. பிடித்த விளையாட்டு?
விளையாட்டில் ஆர்வமில்லை. சிறுவயதில் பள்ளியில் / தெருவில் விளையாடியதோடு சரி.
கணிதம் மற்றும் புதிர்களை தீர்ப்பது பிடிக்கும்.

18.கண்ணாடி அணிபவரா?
14 வருடங்களுக்கு முன்பாக ஒரு வருடம் அணிந்திருந்தேன். அதன்பின் இல்லை.
(இப்போ ஒரு கூலர்ஸ் அணிகிறேன்.. நீங்க அதைக் கேக்கலை இல்லையா.. ! :) )

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
நெஞ்சை நெகிழ வைக்கும், மனதோடு பேசும், உணர்வுகளைத் தயங்காது பேசும் அனைத்து உலகத் திரைப்படங்களும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
கடந்த 3 தினங்களில் பார்த்தவை.. 10000 BC, Benjamin Button, Hotel for dogs and The water (Hindi)

21.பிடித்த பருவ காலம் எது?
குளிர்காலம்.
ஊரில் இருந்தவரை குற்றால சீசன் காலம் .. சீசனில் எங்கள் ஊரில் தூறிகொண்டே இருக்கும்..

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
ஷோபாசக்தியின் கொரில்லா மற்றும் 'Poems To Live By In Uncertain Times' Edited by Joan Murray.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
வழக்கமாக மாற்றுவதில்லை.
அலுவலக லாப்டாப் என்பதால் விதிமுறைகளின்படி பீனிக்ஸ் பல்கலைக்கழக குறியீட்டுப்படம் தான் இருக்க வேண்டும், அதை மாற்றக்கூடாது எனினும் நான் வெகுநாட்களாக தனித்த வெள்ளைப் பூ ஒன்றின் படம் தான் வைத்திருக்கிறேன்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது : உடுக்கை மற்றும் உருமி சத்தம், தபேலா (பாடல் கேட்கையில் தபேலாவின் சப்தத்தை மட்டும் மனம் பிடித்துக்கொண்டு நகரும்..) அமைதியான பொழுதில் கேட்கும் பல பறவைகளின் கலந்த சத்தம், தண்ணீர் சலசலத்தோடும் சத்தம், பாடல் வரிகளற்ற இசையின் சப்தம் (White Mountain, ...)

பிடிக்காதது : சாப்பிடும்போது யாராவது வாயில் சவ சவ என சப்தம் எழுப்பினால் அதன்பின் ஒருநாளும் அவர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட மாட்டேன். அதேபோல் பானத்தை உறுப் உறுப்பெனெ உறிஞ்சும் சத்தமும் அறவே பிடிக்காது. No compromise in these things.. அதென்னவோ அப்படியே பழகிடுச்சு..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
சென்ற வாரம் வரைக்கும் சொன்னால் பீனிக்ஸ், அரிசோனா மாகாணம்,
வார இறுதியையும் சேர்த்தால் சாண்டியாகோ, கலிஃபோர்னியா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இப்போதைக்கு நான் நானாக இருக்கிறேன். தனித்திறமை என்றால் அதை வாழ்வின் கடைசியில் தான் சொல்ல இயலுமென நம்புகிறேன்..

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நடக்கும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்..
There is nothing as good or bad in this world. All just exist.. - ஓஷோ

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்.. சிறுவயதில் வீட்டில் கோபம் வந்து சண்டைபோட்டால் காளியம்மன் கோயில் சாமியாடியே தேவலை என அம்மா சொல்வார்கள்.. அவ்வளவு கோபமாக இருக்குமாம் என் முகம்..
கோபத்தை பெரும்பாலும் கொன்றுவிட்டேன். அதற்காக பலவருடங்களாக எனது உணவுப் பழக்கத்தையே முற்றும் மாற்றிவிட்டேன் என்பது குறிப்பிடத்தக்கது.

நானும் பல இடங்களில் படித்துவிட்டேன்.. கோபத்தைத் தவிர வேறு எதையும் (பெரும்பாலும்) யாரும் எழுதவில்லை ஏன்!? . :))

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
குளிர்ந்த மலைப்பிரதேசம் எதுவானாலும், குறிப்பாக மூணாறு..
தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லும் போக விரும்பும் இடம் கைலாஷ் - மானசரோவர்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
பேரானந்தமாக.

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
ம்ம்.. தெரியலியே...

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
புதிர். அதை அவிழ்க்க வந்துதான் எதையெதையோ அவிழ்த்துக்கொண்டிருக்கிறோம்.

நன்றி.

9 comments:

தமிழ் said...

//உலகத்துல வரும்போதும் தனியாத்தான் வந்தோம்.. போகும் போதும் அப்படித்தானுங்களே. /

/நெஞ்சை நெகிழ வைக்கும், மனதோடு பேசும், உணர்வுகளைத் தயங்காது பேசும் அனைத்து உலகத் திரைப்படங்களும்.
/

/இப்போதைக்கு நான் நானாக இருக்கிறேன். தனித்திறமை என்றால் அதை வாழ்வின் கடைசியில் தான் சொல்ல இயலுமென நம்புகிறேன்../

/27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நடக்கும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்..
There is nothing as good or bad in this world. All just exist.. - ஓஷோ/

/28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்.. சிறுவயதில் வீட்டில் கோபம் வந்து சண்டைபோட்டால் காளியம்மன் கோயில் சாமியாடியே தேவலை என அம்மா சொல்வார்கள்.. அவ்வளவு கோபமாக இருக்குமாம் என் முகம்..
கோபத்தை பெரும்பாலும் கொன்றுவிட்டேன். அதற்காக பலவருடங்களாக எனது உணவுப் பழக்கத்தையே முற்றும் மாற்றிவிட்டேன் என்பது குறிப்பிடத்தக்கது./

/

அருமை நண்பரே

இரசித்தேன்

அன்புடன்
திகழ்

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட் :)))

ஆயில்யன் said...

/சரிபாதியையே இப்பத்தான் கண்டுபிடிச்சிருக்கேன். மேற்படி இனிமே தான் கண்டுபிடிக்கணும்.//


வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள் :))))

ஆயில்யன் said...

//பிடிக்காத விசயம்னு தெரிஞ்சபிறகு, அத ஏந்தான் கூட வச்சுக்கணும்? திருத்தணும், அது திருந்தவே திருந்தாதுன்னா விட்டுடணும்.. சரிதாணுங்களே..
//

மிகச்சரி :)

ஒளியவன் said...

உன்னைப் புரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பம். நல்ல வேளை நான் சாப்பிடும்போதும், பானமருந்தும் போதும் சவக் சவக், உர் உர் என்ற சத்தம் கொடுப்பதில்லை!!!

ஆயில்யன் said...

//அதும் மதிய வெயிலில் யாருமற்ற அருவியில் .//

மதிய வெயிலில் யாருமற்ற அருவி

அதிகாலை வேலை ஆற்று குளியல்

சூப்பர்ரா இருக்கும் :))

காஞ்சனை said...

மிக நன்றாயிருக்கின்றன உங்கள் பதில்கள்.
//ஒளியவன் said...
உன்னைப் புரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பம். நல்ல வேளை நான் சாப்பிடும்போதும், பானமருந்தும் போதும் சவக் சவக், உர் உர் என்ற சத்தம் கொடுப்பதில்லை!!!
//
இதேதான்.. ;-))

மீறான் அன்வர் said...

//அருவிதான்.. அதும் மதிய வெயிலில் யாருமற்ற அருவியில் .. அட அட..
கேள்வியில் ஆற்றையும் சேர்த்திருக்கலாம். //

அதானே :(

//பிடிக்காதது : பிடிக்காத விசயம்னு தெரிஞ்சபிறகு, அத ஏந்தான் கூட வச்சுக்கணும்? திருத்தணும், அது திருந்தவே திருந்தாதுன்னா விட்டுடணும்.. சரிதாணுங்களே..//

சர்தானுங்க

//சரிபாதியையே இப்பத்தான் கண்டுபிடிச்சிருக்கேன்.//
நல்லவேலை நான் தப்பிச்சேன் :)

//ஒருவர் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் ஆனந்தமாகவே இருக்கமுடியும் என்றால் அது நண்பர் மீறான் அன்வர் தான்..//

ஏன் சொல்லமாட்டீங்க இன்னும் கால்கட்டு போடலல்ல :)

// அன்பு நண்பர், சக பதிவர். கவிஞர். :)//

பதிவர்????, கவிஞர் ?????? என்ன கொடும சார் இது :)

//பிடிக்காதது : சாப்பிடும்போது யாராவது வாயில் சவ சவ என சப்தம் எழுப்பினால் அதன்பின் ஒருநாளும் அவர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட மாட்டேன். //

//அதேபோல் பானத்தை உறுப் உறுப்பெனெ உறிஞ்சும் சத்தமும் அறவே பிடிக்காது. No compromise in these things.. அதென்னவோ அப்படியே பழகிடுச்சு..//

நல்லவேல தப்பிச்சோம்டா சாமி :)

//நடக்கும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்..//

நன்று

//நானும் பல இடங்களில் படித்துவிட்டேன்.. கோபத்தைத் தவிர வேறு எதையும் (பெரும்பாலும்) யாரும் எழுதவில்லை ஏன்!? . :))//

கோபம் நல்ல விசயம் கோபப்படுவதைப்பொறுத்து !


//பேரானந்தமாக.//

அப்படியே இருக்க வாழ்த்துக்கள்

//புதிர். அதை அவிழ்க்க வந்துதான் எதையெதையோ அவிழ்த்துக்கொண்டிருக்கிறோம்.//

உங்கள யாருப்பா எதையெதையோ அவிழ்க்கச்சொன்னது :)

நன்று மக்கா வாழ்த்துக்கள் வரப்போகும் சரிபாதிக்கும் சேர்த்து !

இரசிகை said...

yella pathilkalume nalla pathilkal...