Welcome!


தொடர்வண்டி நிலைய இருக்கை

7:42 AM Edit This 9 Comments »






















ஆற்றவியலா பெருந்துன்பம் தரும்
ஒரு பெரும் பயணப்பிரிவின்
சற்றுமுன்னதான தோள்சாய்தல்களை
நீ கணக்கின்றி சுமந்திருக்கலாம்!

யாவரும் அறியாப்பொழுதில்
பிரிவைத்தாளாது ரகசியமாய்
வழிந்ததோர் கண்ணீர்த்துளி
உன்னில் மோதி
சிதறித்தெறித்திருக்கலாம்!

பேசிமுடித்த வார்த்தைகள் போக
எஞ்சிய ஓரிரண்டு
பகிர்வுகளின் திராணியற்று
உன்னில் கிறுக்கப்பட்டிருக்கலாம்

தொலைதூரம் பயணித்த
பல சுமைகளோ களைப்புகளோ
உன்னில் இறக்கிவைக்கப்பட்டு
ஆசுவாசப்பட்டிருக்கலாம்!

தாமதித்த மனிதர்களின் பொருட்டோ
வண்டிகளின் பொருட்டோ
கணிசமான இரவுகளில்
உனக்குத் துணை கிடைத்திருக்கலாம்
இல்லையுன் தனிமை பறிபோயிருக்கலாம்!

இருப்பினும்
இன்றும் வழமையாய்
உன் மடியில் புன்னகையுடனும்
பூக்களுடனும் காத்திருக்கின்றன
பிறக்கப்போகும் பல புதிய நட்புகளும்
புதுப்பிக்கப்படும் பல பழைய உறவுகளும்!

9 comments:

geevanathy said...

///யாவரும் அறியாப்பொழுதில்
பிரிவைத்தாளாது ரகசியமாய்
வழிந்ததோர் கண்ணீர்த்துளி
உன்னில் மோதி
சிதறித்தெறித்திருக்கலாம்! ///

ஞாபகங்களை மீட்டுச்செல்லும் வரிகள்..... ,
வாழ்த்துகள் கோகுலன்

Anonymous said...

சாதாரண விசயங்களை கவிதையுடன் சொல்லியிருப்பது அழகு!

MSK / Saravana said...

அட.. ரொம்ப அழகா நிரம்ப வலிகளோடு இருக்கு கோகுலன்..

//ஆற்றவியலா பெருந்துன்பம் தரும்
ஒரு பெரும் பயணப்பிரிவின்
சற்றுமுன்னதான தோள்சாய்தல்களை
நீ கணக்கின்றி சுமந்திருக்கலாம்!//

மனசு கனமானது..

MSK / Saravana said...

அட.. ரொம்ப அழகா நிரம்ப வலிகளோடு இருக்கு கோகுலன்..

//ஆற்றவியலா பெருந்துன்பம் தரும்
ஒரு பெரும் பயணப்பிரிவின்
சற்றுமுன்னதான தோள்சாய்தல்களை
நீ கணக்கின்றி சுமந்திருக்கலாம்!//

மனசு கனமானது..

Vishnu... said...

இந்த கவிதை
உங்களின் படைப்புகளில்
என்னை மிக அதிகம்
பாதித்த கவிதை
எனலாம் நண்பரே ..

ஒரு கருவின்
அத்தனை முகங்களும்
உங்களால் படிக்கப்படுகிறது ..
அதன் பிரதிபலிப்பை தான்
உங்கள் கவிதைகள்
என்னிடம் சொல்லி
செல்கின்றன ..

தொடருங்கள்...நானும் தொடர்கிறேன் ..

அன்புடன்
விஷ்ணு

கோகுலன் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் மேலான நன்றிகள்!!

NILAMUKILAN said...

தொடர்வண்டி நிலைய இருக்கைகளை கடக்கும்போதெல்லாம் உங்கள் கவிதை ஞாபகம் வந்து தொலைக்க. என் இதயம் கனத்து போகிறது.. பாராட்டுக்கள்.

கோகுலன் said...

//தொடர்வண்டி நிலைய இருக்கைகளை கடக்கும்போதெல்லாம் உங்கள் கவிதை ஞாபகம் வந்து தொலைக்க. என் இதயம் கனத்து போகிறது.. பாராட்டுக்கள்.//

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே. :)

நன்றிகள்..

கோகுலன் said...

//தொடர்வண்டி நிலைய இருக்கைகளை கடக்கும்போதெல்லாம் உங்கள் கவிதை ஞாபகம் வந்து தொலைக்க. என் இதயம் கனத்து போகிறது.. பாராட்டுக்கள்.//

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே. :)

நன்றிகள்..