Welcome!


வனாந்திரத்தின் நடுவே..

9:13 PM Edit This 9 Comments »






















நிலவின்றிக் கருத்த வானத்தின்
வெள்ளைப் பொத்தல்களில்
ஒழுகும் வெளிச்சங்கள்!
நள்ளிரவில் மாத்திரம்
விழித்துக்கொள்ளும்
நிசப்தத்தின் புதிய கூறுகள்!
அடர்மௌனத்தினை
மெதுவாய் சீண்டிப்பார்க்கும்
ஏரிக்கரையின் அலைச்சப்தம்!
அவ்வப்போது இருள்கிழித்து
படபடக்கும் சிறகுகள்
பழகிப்போன இருட்டு
விளக்கிலாத கூடாரம்
செருப்பில்லாத பாதங்கள்
இதயம் கீறிப்பார்க்கும்
நினைவின் நகங்களற்ற தனிமை
விடியற்பொழுதில்
மரக்கிளைகள் விலக்கி
சூரியக்கீற்றுகள்
முகத்தை வருடிய சமயம்
தொலைந்திருந்த நான்!

9 comments:

Vishnu... said...

கவிதை மிக அருமை நண்பரே ...

வார்த்தை பூக்களை
கவிதையாய் சிதறவிட்டு
தொலைந்திருந்த உங்களை
காண வைத்தீர்கள் ..

வாழ்த்துக்களுடன்

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...

MSK / Saravana said...

அழகான கவிதை கோகுலன்..

MSK / Saravana said...

அப்படியே உட்புக முடிந்தது..

யாரோ said...

வாழ்த்துக்கள் கோகுலன் ..எண்ணத்தின் தீவிரம் வரிகளில் தெரிகிறது ...தொடர்ந்து எழதுங்கள்....நடையும் அழகு

நானும் ஒரு வலைப்பதிவு உருவாக்கியுள்ளேன் ..பாருங்களேன்
valaikkulmazhai.wordpress.காம்

-கார்த்தி

Natchatra said...

நிலவின்றிக் கருத்த வானத்தின்
வெள்ளைப் பொத்தல்களில்
ஒழுகும் வெளிச்சங்கள்!

இயற்கையான வெளிச்சம்.....

நள்ளிரவில் மாத்திரம்
விழித்துக்கொள்ளும்
நிசப்தத்தின் புதிய கூறுகள்!

கொஞ்சம் பயமாயிருந்தாலும் நல்லாயிருக்கும்...

அடர்மௌனத்தினை
மெதுவாய் சீண்டிப்பார்க்கும்
ஏரிக்கரையின் அலைச்சப்தம்!

இந்த இசையிக்கு ஈடு இணையே கிடையாது...

அவ்வப்போது இருள்கிழித்து
படபடக்கும் சிறகுகள்

ஹம்ம்ம்ம்....

பழகிப்போன இருட்டு
விளக்கிலாத கூடாரம்
செருப்பில்லாத பாதங்கள்
இதயம் கீறிப்பார்க்கும்
நினைவின் நகங்களற்ற தனிமை

நிறைய நினைவுகள் வந்திருக்குமே.... :-)

விடியற்பொழுதில்
மரக்கிளைகள் விலக்கி
சூரியக்கீற்றுகள்
முகத்தை வருடிய சமயம்
தொலைந்திருந்த நான்!

நிச்சயம் தொலைந்துதான் போயிருப்பீங்க....நீங்க இருக்கது காட்டுக்குள்ள கண்ணா... :-)

அருமையான கவிதை கண்ணா...
நிச்சயம் இப்படிப்பட்ட இயற்கையின் அழகுக்கு ந்டுவில் தொலைந்துதான் போவோம்...நம்து துக்கங்கள் தொலைந்துப்போகும்.... :-)

வாழ்த்துகள் கண்ணா.....

கோகுலன் said...

//வார்த்தை பூக்களை
கவிதையாய் சிதறவிட்டு
தொலைந்திருந்த உங்களை
காண வைத்தீர்கள் ..
//
மிக்க நன்றி நண்பரே விஷ்ணு!

கோகுலன் said...

அன்பு சரவணகுமார், தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா..

கோகுலன் said...

//வாழ்த்துக்கள் கோகுலன் ..எண்ணத்தின் தீவிரம் வரிகளில் தெரிகிறது ...தொடர்ந்து எழதுங்கள்....நடையும் அழகு //

நன்றிகள் நண்பரே.

//நானும் ஒரு வலைப்பதிவு உருவாக்கியுள்ளேன் ..பாருங்களேன்
valaikkulmazhai.wordpress.காம்//

கண்டிப்பாக வருகிறேன்:)

கோகுலன் said...

//நிலவின்றிக் கருத்த வானத்தின்
வெள்ளைப் பொத்தல்களில்
ஒழுகும் வெளிச்சங்கள்!

இயற்கையான வெளிச்சம்.....

நள்ளிரவில் மாத்திரம்
விழித்துக்கொள்ளும்
நிசப்தத்தின் புதிய கூறுகள்!

கொஞ்சம் பயமாயிருந்தாலும் நல்லாயிருக்கும்...

அடர்மௌனத்தினை
மெதுவாய் சீண்டிப்பார்க்கும்
ஏரிக்கரையின் அலைச்சப்தம்!

இந்த இசையிக்கு ஈடு இணையே கிடையாது...

அவ்வப்போது இருள்கிழித்து
படபடக்கும் சிறகுகள்

ஹம்ம்ம்ம்....

பழகிப்போன இருட்டு
விளக்கிலாத கூடாரம்
செருப்பில்லாத பாதங்கள்
இதயம் கீறிப்பார்க்கும்
நினைவின் நகங்களற்ற தனிமை

நிறைய நினைவுகள் வந்திருக்குமே.... :-)

விடியற்பொழுதில்
மரக்கிளைகள் விலக்கி
சூரியக்கீற்றுகள்
முகத்தை வருடிய சமயம்
தொலைந்திருந்த நான்!

நிச்சயம் தொலைந்துதான் போயிருப்பீங்க....நீங்க இருக்கது காட்டுக்குள்ள கண்ணா... :-)

அருமையான கவிதை கண்ணா...
நிச்சயம் இப்படிப்பட்ட இயற்கையின் அழகுக்கு ந்டுவில் தொலைந்துதான் போவோம்...நம்து துக்கங்கள் தொலைந்துப்போகும்.... :-)

வாழ்த்துகள் கண்ணா.....

//

ஒவ்வொரு வரியையும் நீங்கள் ரசித்துள்ளீர்கள் தோழி!

நன்றிகள் பல.. :)