முகங்களின் பெருமை பேசி..
7:25 AM Edit This 15 Comments »தமக்கென தனிப்பட்ட வரையறைகள்
தாங்கியனவாயிருக்கின்றன
இங்குள்ள முகங்களனைத்தும்
அடையாளங்கள் வார்த்த
அச்சுமூலங்களின் முகக்கீறல்களை
கிரீடங்களாயேந்தி கர்வம் கொள்கின்றன அவை
போர்த்தப்பட்ட அலங்காரங்களின்பின்னால்
ஆழத்துயிலுமொரு குழந்தை
விழிப்புதட்டி விசும்பும் பொழுதெல்லாம்
சுயங்களின் நலம்பாடும் தாலாட்டில்
அக்கறையோடு மீண்டும் உறங்கவைக்கப்படுகிறது
தத்தம் முகங்களின் பெருமை பேசியும்
ஒப்பனைகள் செய்தபடியும் நகரும்
நீள் நாளொன்றின் சோர்வான மாலையில்
அனைத்து முகங்களையும் கிழித்துப்பார்க்கிறேன்
அங்கே,
வாழ்க்கையின் மீது
எவ்விதியும் திணித்திராத இயற்கை
வெறுமனே பார்த்தபடியிருக்கிறது
யாவராலும் வரையப்பட்ட ஓவியங்களை!
15 comments:
பல கருத்துக்களைச் சொல்லும் அழகிய கவிதை. நன்றாக உள்ளது.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ரிச்சு..
கவிதையும் அதற்கேற்ற படமும் அருமை தோழா.. எந்த வரி என்று தனித்தனியே பிரித்து சொல்ல முடியவில்லை அத்தனை வரிகளும் ஆழமான அர்த்தம் பொதிந்தவை....
அன்புடன்
நட்சத்திரா..
//ஆழத்துயிலுமொரு குழந்தை
விழிப்புதட்டி விசும்பும் பொழுதெல்லாம்
சுயங்களின் நலம்பாடும் தாலாட்டில்
அக்கறையோடு மீண்டும் உறங்கவைக்கப்படுகிறது //
பின்னீட்டீங்க கோகுலன்.. :))
//தத்தம் முகங்களின் பெருமை பேசியும்
ஒப்பனைகள் செய்தபடியும் நகரும்
நீள் நாளொன்றின் சோர்வான மாலையில்
அனைத்து முகங்களையும் கிழித்துப்பார்க்கிறேன்
அங்கே,
வாழ்க்கையின் மீது
எவ்விதியும் திணித்திராத இயற்கை
வெறுமனே பார்த்தபடியிருக்கிறது
யாவராலும் வரையப்பட்ட ஓவியங்களை!//
ரொம்ப அழகு.. இப்போதைய [சமீபத்ய] உங்கள் கவிதைகளில் என்னை பார்க்க முடிகிறது..
முகமூடிகள், தனிமை, வெறுமை.. நீங்களும் அத்தகைய சூழலில் உழல்கிறீர்களோ???
//கவிதையும் அதற்கேற்ற படமும் அருமை தோழா.. //
Rippeettu.. :)
After a long time i have enjoyed some good Tamil poems.
//தமக்கென தனிப்பட்ட வரையறைகள்
தாங்கியனவாயிருக்கின்றன
இங்குள்ள முகங்களனைத்தும்//
:-)))
முகங்களின் பார்வை மிக அருமை. தொலைந்துவிட்ட என் முகத்தை உங்கள் கவிதை பேசுகிறது. நன்றி.
பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்!
//ரொம்ப அழகு.. இப்போதைய [சமீபத்ய] உங்கள் கவிதைகளில் என்னை பார்க்க முடிகிறது..
முகமூடிகள், தனிமை, வெறுமை.. நீங்களும் அத்தகைய சூழலில் உழல்கிறீர்களோ???//
அதேதான் நண்பரே.. தனிமையும் அதன் சோகமும் கவிதையாகும் பொழுது அது சம்பந்தப்பட்ட யாவரையும் இழுக்கிறது..
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஆனந்தபாண்டியன்.. :)
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஆனந்தபாண்டியன்.. :)
//முகங்களின் பார்வை மிக அருமை. தொலைந்துவிட்ட என் முகத்தை உங்கள் கவிதை பேசுகிறது. நன்றி.//
மிக்க நன்றி நண்பரே நிலா முகிலன்.
உங்கள் பெயர் நல்ல தேர்வு. :)
நன்றி செல்வா.. :)
vaazhthugal
Post a Comment