ஒரு காரணம் தேவைப்படுகிறதுதான்
4:34 AM Edit This 29 Comments »சேட்டுக்கடையில் அடகுவைத்த
செப்புச்சருவம்
கட்டாத வட்டியில் மூழ்கிப்போக
பதிலுக்கு இரண்டாய்
பிளாஸ்டிக் குடங்கள் வாங்கி
சொல்லிக்கொண்டாள்
'தூக்கிச் சுமக்க
இதுதான் நல்ல வசதி..'
கழுத்தில் கிடந்த
பொட்டுத்தங்கத்தை
கஞ்சிக்காய் விற்ற பொழுதும்
மேம்போக்காக சொல்லிக்கொண்டாள்
'இனிமேலாவது இருட்டுல
பதறாம போய்வரலாம்..'
கல்யாணவயதை
கடந்து நிற்கும் மகளை
இரண்டாம் தாரமாய் கேட்டுவர
சரியென்றவள் சாவகாசமாய்
காரணமும் சொன்னாள்
'மாப்பிளைக்கு வயசவிடவும்
அனுபவம் முக்கியந்தான...'
உள்ளுக்குள் கதறியழும்
மனதுக்கும் ஆறுதல் சொல்ல
தனக்குத்தானே ஒரு காரணமும்
தேவைபடுகிறதுதான்!
29 comments:
அழகுக் கவிதை. வாழ்க்கையில் எல்லோருக்குமே, ஏமாற்றங்கள் ஏற்படுகையில் இப்படி "ஒரு காரணம் தேவைப் படுகிறதுதான்".
ஆஹா. அருமை கோகுலன். நாம் எல்லோருமே ரொம்பக் கெட்டிக்காரர்கள்தான், இதைப்போல் காரணங்கள் கண்டுபிடிப்பதில். அழகாய்க் கவிதையில் சொல்லி விட்டீர்கள்!
/உள்ளுக்குள் கதறியழும்
மனதுக்கும் ஆறுதல் சொல்ல
தனக்குத்தானே ஒரு காரணமும்
தேவைபடுகிறதுதான்!/
அழகான வரிகள்
ரணங்களுக்கு எல்லாம்
காரணங்களை
கண்டுக்கொண்டால்
மண்ணில்
மரணங்களை எல்லாம் தேடி
மனது போகாது
//உள்ளுக்குள் கதறியழும்
மனதுக்கும் ஆறுதல் சொல்ல
தனக்குத்தானே ஒரு காரணமும்
தேவைபடுகிறதுதான்!//
உண்மைதான் கோகுலன் :)
அருமை.
/ கல்யாணவயதை
கடந்து நிற்கும் மகளை
இரண்டாம் தாரமாய் கேட்டுவர
சரியென்றவள் சாவகாசமாய்
காரணமும் சொன்னாள்
'மாப்பிளைக்கு வயசவிடவும்
அனுபவம் முக்கியந்தான...' /
அருமை அருமையான வரிகள் கோகுலன். தெடருங்கள் உங்கள் முயற்சியை.
அன்றாட வாழ்வியல் எதார்த்தங்களை மிக இயல்பாகப் பதிவுசெய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
தன்னைத்தானே (ஏ)மாற்றி கொள்வதை அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்!
சுடுகிற வரிகள்...
//உள்ளுக்குள் கதறியழும்
மனதுக்கும் ஆறுதல் சொல்ல
தனக்குத்தானே ஒரு காரணமும்
தேவைபடுகிறதுதான்//
முற்றிலும் உண்மை.. அருமையான கவிதை.. லின்க் குடுத்த நட்ச்சத்திரா அக்காவுக்கு நன்றி.. இனி அடிக்கடி வருவோம்ல.. :))
*உள்ளுக்குள் கதறியழும்
மனதுக்கும் ஆறுதல் சொல்ல
தனக்குத்தானே ஒரு காரணமும்
தேவைபடுகிறதுதான்!*
சத்தியமான வரிகள்...
எல்லோரும் வாழும் முறையினைசொல்லும் வரிகள்...
வாழ்த்துகள் தோழா....
அன்புடன்
நட்சத்திரா...
//உள்ளுக்குள் கதறியழும்
மனதுக்கும் ஆறுதல் சொல்ல
தனக்குத்தானே ஒரு காரணமும்
தேவைபடுகிறதுதான்! //
கதறியழும் மனதுக்கு மட்டுமல்ல கோகுலன்.கதறியழும் உறவுகளுக்கும் சிலசமயம் காரணங்களை மட்டுமே சொல்லமுடிகிறது.
கவிதை அருமை.
தொடர்ந்து எழுதுங்கள்.
பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றிகள் ராமலக்ஷ்மி!!
பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றிகள் ராமலக்ஷ்மி!!
பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றிகள் ராமலக்ஷ்மி!!
பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றிகள் கவிநயா
//ரணங்களுக்கு எல்லாம்
காரணங்களை
கண்டுக்கொண்டால்
மண்ணில்
மரணங்களை எல்லாம் தேடி
மனது போகாது//
மிகவும் உண்மைங்க..
பின்னூட்டங்களுக்கு நன்றிகள் திகழ்மிளிர்!
நன்றிகள் குட்டிச்செல்வன்..
முதலாய் வந்திருக்கீங்க.. அன்போடு வரவேற்கிறேன் :))
வாங்க வருண்.. முதன்முதலாய் என் வலைப்பூவிற்கு வந்திருக்கீங்க.. அன்போடு வரவேற்கிறேன்..
நன்றிகள்!!
மிக்க நன்றிகள் அகரம் அமுதா!
மிக்க நன்றிகள் நல்லவன் :))
மிக்க நன்றிகள் நல்லவன் :))
அன்பு நண்பரே தமிழன், அன்போடு வரவேற்கிறேன்..
பின்னூட்டங்களுக்கு நன்றிகள்!
//முற்றிலும் உண்மை.. அருமையான கவிதை.. லின்க் குடுத்த நட்ச்சத்திரா அக்காவுக்கு நன்றி.. இனி அடிக்கடி வருவோம்ல.. :))/
வாங்க வாங்க சஞ்சய்!
எப்படி இருக்கீங்க?
பின்னூட்டங்களுக்கு நன்றிகள்.. அடிக்கடி வந்து வாசிக்க வேண்டுகிறேன்..
//முற்றிலும் உண்மை.. அருமையான கவிதை.. லின்க் குடுத்த நட்ச்சத்திரா அக்காவுக்கு நன்றி.. இனி அடிக்கடி வருவோம்ல.. :))/
வாங்க வாங்க சஞ்சய்!
எப்படி இருக்கீங்க?
பின்னூட்டங்களுக்கு நன்றிகள்.. அடிக்கடி வந்து வாசிக்க வேண்டுகிறேன்..
//கதறியழும் மனதுக்கு மட்டுமல்ல கோகுலன்.கதறியழும் உறவுகளுக்கும் சிலசமயம் காரணங்களை மட்டுமே சொல்லமுடிகிறது.//
அன்பை புரியும் உறவுகள் அழவைப்பதில்லை தான் நண்பா!!
நன்றிகள்.. :))
//சத்தியமான வரிகள்...
எல்லோரும் வாழும் முறையினைசொல்லும் வரிகள்...
வாழ்த்துகள் தோழா....//
வழக்கம் போல் உற்சாகமூட்டும் பின்னூட்டம்..
நன்றிகள் தோழி!
உணமை வரிகள்,
அருமை:)
100% Unmaiyaanathu - Totally Agree :-)
//உள்ளுக்குள் கதறியழும்
மனதுக்கும் ஆறுதல் சொல்ல
தனக்குத்தானே ஒரு காரணமும்
தேவைபடுகிறதுதான்!//
மனசு கனக்கிறது..
:(
Post a Comment