Welcome!


நினைவுகளின் மீள்வாசிப்பு

12:19 PM Edit This 7 Comments »


கொட்டும்பனியிலும்
பறவைகளுக்கு உணவிட மறந்திராத
கருப்பு அங்கி மூதாட்டி
தாயின் மார்பில் சாய்ந்தபடி
தயங்கித் தயங்கி விழியுயர்த்தி
வெட்கிப் புன்னகைத்த சிறு குழந்தை
பூட்டிக்கொண்டிருந்த மின்னுயர்த்தி தடுத்து
புன்முருவலித்து எனையேற்றிக்கொண்ட
விரிந்த உதட்டு ஆப்பிரிக்க அழகி
அழுக்குச் சட்டையுடன் சிக்னலில்
உதவி கேட்டுக்கொண்டிருந்த
ஒற்றைக் கண் பிச்சைக்காரன்
இந்நள்ளிரவில் பலரையும் அழைத்துவந்து
கவிதையின் வார்த்தைகள் விலக்கி
அமரவைத்திருக்கிறேன்
பிழைகளால் பிடிமானமின்றி
மேசையில் உதிர்ந்துகிடக்கும் வார்த்தைகள்
என்னுடன் சேர்ந்து மீள்வாசிக்கின்றன
எழுதி முடித்த கவிதையை

7 comments:

நட்புடன் ஜமால் said...

\\பிழைகளால் பிடிமானமின்றி
மேசையில் உதிர்ந்துகிடக்கும் வார்த்தைகள்\\

இரசித்தேன்.

ny said...

பலரையும் அழைத்துவந்து ..அமரவைத்திருக்கிறேன்

standing out!!

MSK / Saravana said...

ரொம்ப நல்லா இருக்கு கவிதை..

Anonymous said...

//பிழைகளால் பிடிமானமின்றி
மேசையில் உதிர்ந்துகிடக்கும் வார்த்தைகள்
என்னுடன் சேர்ந்து மீள்வாசிக்கின்றன //

மிக அழகான கவிதை...
வாழ்த்துகள்

Unknown said...

கவிதை அழகு :))

கோகுலன் said...

அன்பு நண்பர்களின் மேலான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றிகள்..

நண்பர் ஜமால்
kartin
சரவணகுமார்
ஸ்ரீமதி
Anonymous

அனைவரின் கருத்துக்கும் நன்றிகள்..

butterfly Surya said...

அருமை நண்பரே.

வாழ்த்துகள்.