ஒரு நேசத்தின் மிச்சம்
12:10 PM Posted In திண்ணை Edit This 4 Comments »
மனத்துவாரங்களில் கசியும் நேசத்தின் மிச்சம்
உன் வன்மங்களை அறியத் துணியவில்லை
நீயூட்டிச் சென்ற நஞ்சைப் புரிந்தபின்னும்
தேவதையென்றே புலம்புகின்றன
நிகழ்வுகள் அறியா உதடுகள்
கடவுச்சொற்கள் முதல்
அறையின் அலங்காரங்கள் வரையென
நிறைத்து வைத்திருக்குமென் காதலில்
இன்னும் கொஞ்சம் உயிர்
இருக்கத்தான் செய்கிறது..
இக்கடுங்குளிர்காலம் தாண்டியொரு கோடையில்
உனையேந்திய கடவுச்சொற்கள் போன்றே
காலாவதியாகியிருக்கலாம்
என் காதலும்..
4 comments:
/மனத்துவாரங்களில் கசியும் நேசத்தின் மிச்சம்
உன் வன்மங்களை அறியத் துணியவில்லை
நீயூட்டிச் சென்ற நஞ்சைப் புரிந்தபின்னும்
தேவதையென்றே புலம்புகின்றன/
உண்மை தான்
//உனையேந்திய கடவுச்சொற்கள் போன்றே
காலாவதியாகியிருக்கலாம்
என் காதலும்..///
அட இது ரொம்ப நல்லாருக்கே!!!!
அன்புடன் அருணா
"உனையேந்திய கடவுச்சொற்கள்" நீங்களுமா கோகுலன்:) இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு நீண்ட பயணத்தின் பின் வீடு திரும்பியிருக்கிறேன். நேரம் எடுத்துக்கொண்டு வந்து வாசிக்கவேண்டும் அனைத்துப் பதிவுகளையும்.
நல்ல கவிதை !
Post a Comment