நானும் காதலும் - 1
6:03 AM Posted In கீற்று Edit This 7 Comments »
மெந்நீலக் கடற்பரப்பின் மீதுலாவும்
தென்றலின் வழியே
நீயனுப்பும் அன்பின் செய்திகளில்
நனைந்துவரும் வண்ணத்துப்பூச்சி
என் வாசல் கடக்கும் தருணம்
அதன் பின்னோடிச் சென்று
செட்டை வருடுகிறேன்
விரல்களில் ஒட்டிக்கொள்கிறது
உன் நேசம்!
அதி குளிர் காலத்தின்
பனிபொழிந்த காலையொத்து
வெண்மை வெடித்துக் கிடக்கிற
இப் பாலைப் பருத்திக்காட்டின்
ஒரு மூலையில் நின்றபடி
உன் பெயரை உரக்கக் கூவுகிறேன்
மெல்லத்தவழும் மேற்காற்றில்
நிறைந்து மிதக்கின்றன
நம் காதலின் பிசிறுகள்!
7 comments:
அழகா இருக்கு கோகுலன்..
இயற்கையின் துணையோடு சொல்லப்பட்ட காதல் கவிதையும் அழகு...உங்கள் காதலும் அழகு....
உங்களின் காதலி அதிர்ஷ்டமிக்கவள்.. சீக்கிரம் உங்கள் காதலியோடு இணைந்து பாலைப் பருத்திக்காட்டின்
ஒரு மூலையில் நின்றபடி இருவரும் ஒருவர் பெயரை மற்றவர் உரக்கக்கூவி மகிழ வாழ்த்துகள் கண்ணா... :) :):)
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.. மனசுக்குள் தூறுவதை போலிருக்கிறது..
வாங்க நண்பரே சரவணா.. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்..
//இயற்கையின் துணையோடு சொல்லப்பட்ட காதல் கவிதையும் அழகு...உங்கள் காதலும் அழகு....//
:))
மிக்க நன்றிங்க நட்சத்ரா..
Azhagaana Kavithai :)..Nostalgic :)
Kavithaigal super! I invite you to visit my blog. http://kadhalmozhi.blogspot.com.
Post a Comment