Welcome!


பிரிந்தும் பிரியாத நினைவுகள்

6:56 AM Posted In Edit This 15 Comments »










இரவின் நீளத்திற்கு
நீண்டிருந்த மழையில்
சாரல் மட்டும் வைத்துக்கொண்டு
மீதியை தொலைத்திருந்தது விடியல்

நீரின் பாரம் தாளாமல்
நிலம்நோக்கியிருந்த மரக்கிளைகள்
நினைவுகளின் உன்னை தாங்கிய
என் போலவேயிருக்கின்றன

அவ்வப்போது அதிர்ந்துவீசும் காற்றுக்கு
திரவப்பூக்கள் சிந்தி
பாரம் குறைக்கும் மரக்கிளைகள்
என்னினும் அறிவார்ந்தவை

நானோ இந்த மழைநேரத்தில்
வழக்கமாய் வாசல்வரும் தேன்சிட்டுக்கும்
ஜன்னலில் கத்தும் குருவிகளுக்கும்
கவலைப்படவேனும் எத்தனிப்பின்றி
வெறுமனே மழையை வெறித்திருக்கிறேன்

நினைவுச்சுமைகளுடனான யதார்த்தப் பயணங்கள்
இன்னும் பழக்கப்படவில்லை எனக்கு
பிரிந்தும் பிரியாத நினைவுகள்
மிகவும் கொடுமைதான்

வழக்கமாய்
இன்றும் பகற்பொழுது மெதுவாய் கழியும்
மாலையில் மீண்டும் பெருமழை பிடிக்க
மரக்கிளைகள் சரியத்துவங்கும்

15 comments:

NILAMUKILAN said...

அற்ப்புதமான சொல்லாடல். அருமையான கவிதை. நன்றி கோகுல்.

Veera said...

கவிதை நன்றாக உள்ளது!

ராமலக்ஷ்மி said...

//அவ்வப்போது அதிர்ந்துவீசும் காற்றுக்கு
திரவப்பூக்கள் சிந்தி
பாரம் குறைக்கும் மரக்கிளைகள்
என்னினும் அறிவார்ந்தவை//

பாரம் குறைத்திடும் வித்தை நமக்கு மட்டும் பிடிபடுவதேயில்லை.

அருமையான கருத்துக்களை அடக்கிய கவிதை வெகு அழகு கோகுலன். வாழ்த்துக்கள்!

தமிழன்-கறுப்பி... said...

ம்ம்ம்...

Kavinaya said...

//நீரின் பாரம் தாளாமல்
நிலம்நோக்கியிருந்த மரக்கிளைகள்
நினைவுகளின் உன்னை தாங்கிய
என் போலவேயிருக்கின்றன//

அருமையான உருவகம் கோகுலன். பிரிந்தும் பிரியாத நினைவுகள் சுமைதான். சமயங்களில் சுகமும் கூட. அருமையாக எழுதறீங்க. வாழ்த்துகள்.

MSK / Saravana said...

அருமையான கவிதை.. மிக மிக அருமையான கவிதை.
ஒவ்வொரு வார்த்தையும் நிகழ்வும் மிக அழகு..
:)

தொடர்ந்து அடிக்கடி எழுதுங்கள்.
:)

ஹேமா said...

வணக்கம் கோகிலன்.நினைவுகளின் பாரம் மரக்கிளைகளில் தேங்கி நிற்கும் மழைநீராயும்,கிளைகளுக்கு காற்றாவது உதவி செய்து பாரத்தை குறைக்கிறதே என்ற ஏக்கம் உங்களுக்கு.என்றாலும் மீண்டும் மாலை மழை வரும் மனதைப் பாரமாக்க...
பிரிவு உங்கள் மனதைப் பாரமாக்க, பெருமழை மரக்கிளைகளைப் பாரமாக்க...அழகான காதல்.

கோகுலன் said...

பின்னூட்டமிட்ட நிலாமுகிலன், வீரா, ராமலக்ஷ்மி, தமிழன், சரவணா, கவி மற்றும் ஹேமா அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!!

கோகுலன் said...

//பாரம் குறைத்திடும் வித்தை நமக்கு மட்டும் பிடிபடுவதேயில்லை.//

உண்மைதாங்க ராமலக்ஷ்மி!

கோகுலன் said...

//பிரிந்தும் பிரியாத நினைவுகள் சுமைதான். சமயங்களில் சுகமும் கூட. /

இருந்தும் எல்லாம் சுகமான சுமைகளாக அமைவதில்லை.. :)

கோகுலன் said...

//கோகிலன்.நினைவுகளின் பாரம் மரக்கிளைகளில் தேங்கி நிற்கும் மழைநீராயும்,கிளைகளுக்கு காற்றாவது உதவி செய்து பாரத்தை குறைக்கிறதே என்ற ஏக்கம் உங்களுக்கு.என்றாலும் மீண்டும் மாலை மழை வரும் மனதைப் பாரமாக்க...
பிரிவு உங்கள் மனதைப் பாரமாக்க, பெருமழை மரக்கிளைகளைப் பாரமாக்க...அழகான காதல்./

மிக்க நன்றி தோழி!

கோகுலன் said...

//அருமையான கவிதை.. மிக மிக அருமையான கவிதை.
ஒவ்வொரு வார்த்தையும் நிகழ்வும் மிக அழகு..//

மிக்க நன்றி நண்பா..

கோகுலன் said...

///வணக்கம் கோகிலன்.நினைவுகளின் பாரம் மரக்கிளைகளில் தேங்கி நிற்கும் மழைநீராயும்,கிளைகளுக்கு காற்றாவது உதவி செய்து பாரத்தை குறைக்கிறதே என்ற ஏக்கம் உங்களுக்கு.என்றாலும் மீண்டும் மாலை மழை வரும் மனதைப் பாரமாக்க...
பிரிவு உங்கள் மனதைப் பாரமாக்க, பெருமழை மரக்கிளைகளைப் பாரமாக்க...அழகான காதல்.//

வணக்கம் ஹேமா.. அருமையான பின்னூடத்திற்கு மிக்க நன்றிகள்...

செல்வேந்திரன் said...

ஒரு கரு சுகப்பிரசவம் ஆகியிருக்கிறது...மன வலிகளே நல்ல கவிதைகளை பெற்றெடுக்கும்...

அன்புடன்,
செல்வேந்திரன்.

Kavipriyai said...

அருமையா இருக்கு உங்கள் வரிகள்