ஒரு பயணமும் கொஞ்சம் புன்னகையும்
8:08 AM Posted In காதல் Edit This 15 Comments »
நான் எங்கிருந்து வந்தேனென உனக்கும்
நீ எங்கிருந்து வந்தாயென எனக்கும்
யார் யாரை தொடர்ந்தோமென இருவருக்கும்
சற்றும் புரியாதவொரு மழைச்சாரல் பொழுதின்
அடுத்த சற்றுநேரத்திற்கெல்லாம்
அந்த ஒற்றையடிப்பாதையை பகிர்ந்து
ஓரோரமாய் நடைபோயிருந்தோம்
இருவரின் கைகள் தெரிந்தே உரசியபடி!
தூரமாய் கேட்டதொரு காட்டாற்றின்
துல்லிய சப்தத்தை சாட்சியாய்க்கொண்டு
காட்டுப்பூக்களின் மகரந்த தூவல்களுடனும்
மழைத்தூரல்களின் தோரணைகளுடனும்
பழகினோம் சிரித்தோம் களித்தோம்
இன்னும் பிறந்திராத நம்
இருவரின் சாயல்கொண்ட சில பிள்ளைகள்
தும்பிகளுடன் விளையாடியும்
சாரலில் நனைந்தும் பயணப்பட்டார்கள் நம்முடன்
சிலகாத தூரங்களை யுகங்களில் கடந்தபின்
அச்சிறு பயணம் முடித்து
அகலவிரிந்தந்த பெருஞ்சாலை கண்டபொழுதுதான்
நம்மிருவரின் பாதைகளும் எதிரெதிர்த்திசையில்
அமைந்திருந்ததை அறிந்தோம்
அதன்பின், உன்னுடையது என்னுடையதென
பிரித்தறிய இயலாத பிறிதொரு இரவுப்பொழுதில்
உதட்டில் திணிக்கப்பட்ட புன்னகையுடனும்
ஒன்றாய் நனைந்த நான்கு விழிகளுடனும்
நினைவுகளை சுருட்டி பிரியத்துணிந்தோம்
மீண்டும் இணையுமந்த பாதைதேடி
நீளுமிந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின்
ஒவ்வொரு தேடலிலும் நம்மைபார்த்து
அர்த்தமாய் புன்னகைக்கின்றன காட்டுப்பூக்கள்!
15 comments:
அழகான கவிதை..
:)
//இன்னும் பிறந்திராத நம்
இருவரின் சாயல்கொண்ட சில பிள்ளைகள்
தும்பிகளுடன் விளையாடியும்
சாரலில் நனைந்தும் பயணப்பட்டார்கள் நம்முடன்//
:)
:)
//மீண்டும் இணையுமந்த பாதைதேடி
நீளுமிந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின்
ஒவ்வொரு தேடலிலும் நம்மைபார்த்து
அர்த்தமாய் புன்னகைக்கின்றன காட்டுப்பூக்கள்!//
அருமை..
:)
//மீண்டும் இணையுமந்த பாதைதேடி
நீளுமிந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின்
ஒவ்வொரு தேடலிலும் நம்மைபார்த்து
அர்த்தமாய் புன்னகைக்கின்றன காட்டுப்பூக்கள்!//
காதல் மட்டுமல்ல; வாழ்க்கை முழுவதும் எப்படிப் பார்த்தாலும் கண்ணாமூச்சி ஆட்டமாகத்தான் இருக்கிறது. அருமையான சித்தரிப்பு!
அழகான காதல் கவிதை..
//தூரமாய் கேட்டதொரு காட்டாற்றின்
துல்லிய சப்தத்தை சாட்சியாய்க்கொண்டு
காட்டுப்பூக்களின் மகரந்த தூவல்களுடனும்
மழைத்தூரல்களின் தோரணைகளுடனும்
பழகினோம் சிரித்தோம் களித்தோம்//
உங்களின் இயற்கை மேல் கொண்ட காதலயும் சொல்லும் கவிதை... :) :)
நீங்க சொல்லும் போது இன்னும் அழகாயிருக்கிறது....
வாழ்த்துகள் கண்ணா...
அன்புடன்
நட்சத்திரா
இந்த பூக்களின் படம் ரொம்ப நல்லாருக்கு கண்ணா... :-))
வணக்கம் கோகுலன்,தங்கள் நிலை மறந்து இயற்கையோடு ஒன்றி காதலால் இணைந்தவர்கள்,
நினைவின் வேதனைகளச் சுருட்டிவைத்துப் பிரியும் நிலையயும் பார்த்துக் காட்டுப்பூக்கள் கூட கலங்குவதாக...அருமையான காதல் கவிதை.
ஊக்கமிகுந்த பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் சரவணகுமார்!!
//காதல் மட்டுமல்ல; வாழ்க்கை முழுவதும் எப்படிப் பார்த்தாலும் கண்ணாமூச்சி ஆட்டமாகத்தான் இருக்கிறது. //
உண்மைதாங்க கவிநயா..
அருமையான சித்தரிப்பு! -- மிக்க நன்றீங்க..
//
உங்களின் இயற்கை மேல் கொண்ட காதலயும் சொல்லும் கவிதை... :) :)
நீங்க சொல்லும் போது இன்னும் அழகாயிருக்கிறது....//
ஊக்கமிகுந்த பின்னூட்டத்திற்கு நன்றிகள் நட்சத்ரா!
//வணக்கம் கோகுலன்,தங்கள் நிலை மறந்து இயற்கையோடு ஒன்றி காதலால் இணைந்தவர்கள்,
நினைவின் வேதனைகளச் சுருட்டிவைத்துப் பிரியும் நிலையயும் பார்த்துக் காட்டுப்பூக்கள் கூட கலங்குவதாக...அருமையான காதல் கவிதை.//
அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் ஹேமா.
//இந்த பூக்களின் படம் ரொம்ப நல்லாருக்கு கண்ணா... :-))
//
இது நான் எடுத்த புகைப்படம் தான் !!
:))
//இந்த பூக்களின் படம் ரொம்ப நல்லாருக்கு கண்ணா... :-))
//
இது நான் எடுத்த புகைப்படம் தான் !!
:))
//இது நான் எடுத்த புகைப்படம் தான் !!//
ohh reallyyyy.... lovely Kanna....
tell me what you don't know??? poem, art, photography.......ur list of interests are loooooooooooooong..... Keep up the good work...like to c more of your art and photography....
//மீண்டும் இணையுமந்த பாதைதேடி
நீளுமிந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின்
ஒவ்வொரு தேடலிலும் நம்மைபார்த்து
அர்த்தமாய் புன்னகைக்கின்றன காட்டுப்பூக்கள்!//
கவிதையைப் படித்ததும் எனக்குத் தோன்றியதை கவிநயா ஏற்கனவே சொல்லிவிட்டிருந்தாலும், சொல்லமால் இருக்க இயலவில்லை. காதல் மட்டுமின்றி நட்புகள், உறவுகள் என வாழ்க்கையில் மறுபடி இணையும் புள்ளி எதிர் நோக்கியே கண்ணாமூச்சி ஆட்டங்கள். அர்த்தத்துடன் புன்னகைக்கும் காட்டுப் பூக்களில் கடவுளின் முகம் காண்கிறேன்.
Post a Comment