இரண்டற கலத்தலென்பது..
10:45 AM Posted In காதல் Edit This 12 Comments »கிழியாத வானம் போல்
பிரியாத உறவு
இந்த இணைபுறாக்களுடையது
ஒன்றாய் பறக்கையிலும்
ஒன்றின் இறகு
விசிறித்தரும் காற்றே
மற்றொன்றின் சுவாசம்
இவை,
மூச்சுவிட்ட எண்ணிக்கையினும்
முத்தமிட்ட எண்ணிக்கை அதிகம்
இறகுகளின் அசைவைவிட
இதயங்களின் இசைவுகள் அதிகம்
மழைநேரத்தில்
இரண்டுமே தாயாகும்
ஒன்று மற்றதை அடைகாப்பதில்
இன்று காலையில் பறந்த
உண்டிவில் கல்லொன்று
ஒன்றின் உயிரை பறித்துப்போக,
கண்ணீருடன் தன்னுயிரை உதிர்த்தது
தனியான மற்றொன்று
இறக்கும் வரை இணைந்தேயிருக்கும்
தெய்வீக காதலரின் முன்னால்
இவையோ இறந்தபின்னும்
இணைந்திருந்தன
அன்பிலும் அடுப்பிலும்
ஒன்றாய்த்தான் கொதித்தன
பரிமாறப்பட்டதுவும் அப்படியே!!
12 comments:
//ஒன்றாய் பறக்கையிலும்
ஒன்றின் இறகு
விசிறித்தரும் காற்றே
மற்றொன்றின் சுவாசம்//
//மூச்சுவிட்ட எண்ணிக்கையினும்
முத்தமிட்ட எண்ணிக்கை அதிகம்//
அருமை! கோகுலன்! எப்படி இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள்!
//அன்பிலும் அடுப்பிலும்
ஒன்றாய்த்தான் கொதித்தன
பரிமாறப்பட்டதுவும் அப்படியே!!//
சிறப்பான முத்தாய்ப்பு :(
(வருத்தக் குறி புறாக்களின் நிலையை எண்ணி இட்டது)
அன்பின் கோகுலன்,
முதல்வரிகளை இயல்பாகப் படிக்கவைத்து இறுதிப்பத்தியில் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டீர்கள்.
//இறக்கும் வரை இணைந்தேயிருக்கும்
தெய்வீக காதலரின் முன்னால்
இவையோ இறந்தபின்னும்
இணைந்திருந்தன
அன்பிலும் அடுப்பிலும்
ஒன்றாய்த்தான் கொதித்தன
பரிமாறப்பட்டதுவும் அப்படியே!!//
சம்பந்தப்பட்டவர் இக்கவிதையைப் படிக்கநேர்ந்தால் சாப்பிடவே மாட்டார்.
ஆழமான,அருமையான,அழகிய கவிதை நண்பா :)
//இவை,
மூச்சுவிட்ட எண்ணிக்கையினும்
முத்தமிட்ட எண்ணிக்கை அதிகம்
இறகுகளின் அசைவைவிட
இதயங்களின் இசைவுகள் அதிகம்
மழைநேரத்தில்
இரண்டுமே தாயாகும்
ஒன்று மற்றதை அடைகாப்பதில்//
என்னைக் கவர்ந்த வரிகள்!
/இவை,
மூச்சுவிட்ட எண்ணிக்கையினும்
முத்தமிட்ட எண்ணிக்கை அதிகம்
இறகுகளின் அசைவைவிட
இதயங்களின் இசைவுகள் அதிகம்/
/மழைநேரத்தில்
இரண்டுமே தாயாகும்
ஒன்று மற்றதை அடைகாப்பதில்/
அழகான வரிகள்
நன்றி கவிநயா..
//அருமை! கோகுலன்! எப்படி இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள்!
//
இது என் நண்பன் வீட்டுக்கு சென்ற சமயம் அவர்களின் கிணற்றில் இருந்த புறாக்கூட்டிலிருந்து புறாக்குஞ்சுகள் எடுத்து எனக்காக சமைத்தார்கள்..
நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.. மனசில்லாமல் சாப்பிட்டுவிட்டு பின் மிகவும் வருந்தினேன் .. அதனால் எழுதியதே இக்கவிதை..
மிக்க நன்றி நண்பனே..
//சம்பந்தப்பட்டவர் இக்கவிதையைப் படிக்கநேர்ந்தால் சாப்பிடவே மாட்டார்.//
நான் தானடா அது.. வேறு வழியில்லாமல் சாப்பிட கட்டாயப்படுத்தபட்டேன்..:(
தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் அகரம் அமுதா!
தங்களின் மேலான பின்னூட்டத்திற்கும் நேரத்திற்கும் மிக்க நன்றிகள் திகழ்மிளிர்!
தலைப்பிற்கு ஏற்ற வரிகள் கோகுலன் :))
நல்ல எழுதுறீங்க..
வாழ்த்துக்கள்
நன்றிகள் குட்டி :))
வரிகள் அழகு, முடிவு துயரம்....
its really good
manathai thottavaiyaha irukka mutha variga
manathil siru kalangathaium
sinna sogathaum
yeanthiya badi irukka iruthui varigal
yeninum mounama
rasithen ungal kavithaiyai..... its really nice
Post a Comment