அந்தரங்கம் அறிதலென்பது..
9:08 PM Edit This 23 Comments »அடுத்தவரின் அந்தரங்கமறிய
ஆசையில்லாதவர்
யாருமில்லையிங்கு!
சுவாரஸ்யம் தேடித்திரியும்
சில மனிதப்புலிகளுக்கு
ஓடத்தெரியாத மான்களென
மாட்டிக்கொள்கின்றன
கசிந்துபோன சில அந்தரங்கங்கள்!
ஒழுகிபோன ஒவ்வொரு அந்தரங்கமும்
ஆயிரம் முறைகள் பொழியும்
அடைமழையாய்!
செய்தித்தாள் துணுக்குகள் முதல்
குழாயடி பெண்களின் கிசுகிசு வரை
அரங்கேற்றத்துடனே அம்பலமாகின்றன
அவை!
நமக்கேன் வம்பு என
ஒதுங்கிச்செல்லும் கால்கள்கூட
காதுகள் கூர்மையாக்கியே நடக்க,
அந்தரங்கம் அறிதலென்பது
யாருக்கும் வெறுப்பதேயில்லை,
தனதானது தெருமுனையில்
சிரிக்கப்படும் வரையிலும்!
23 comments:
//சுவாரஸ்யம் தேடித்திரியும்
சில மனிதப்புலிகளுக்கு
ஓடத்தெரியாத மான்களென
மாட்டிக்கொள்கின்றன
கசிந்துபோன சில அந்தரங்கங்கள்//
உண்மையான வரிகள்...
வாழ்வில் முன்னேற விடாமல் தடுக்கும் அடுத்தவரின் அந்தரங்கம் பேசும் சுற்றத்தினர்....
//அந்தரங்கம் அறிதலென்பது
யாருக்கும் வெறுப்பதேயில்லை,
தனதானது தெருமுனையில்
சிரிக்கப்படும் வரையிலும்!//
தன்னைப்பற்றி பேசும் போது சுருங்கித்தான் போகிறார்கள்...
அன்று தான் உணர்கிறார்கள் வலியினை...
அழகான கவிதை...
அன்புடன்
நட்சத்திரா...
//அந்தரங்கம் அறிதலென்பது
யாருக்கும் வெறுப்பதேயில்லை,
தனதானது தெருமுனையில்
சிரிக்கப்படும் வரையிலும்!//
மிக அழகாக எழுதுகிறீர்கள் கண்ணா.
அருமையான கவிதை :)
//நமக்கேன் வம்பு என
ஒதுங்கிச்செல்லும் கால்கள்கூட
காதுகள் கூர்மையாக்கியே நடக்க,//
உண்மையை சொன்னீங்க! அழகான கவிதை, வழக்கம் போல!
\\அந்தரங்கம் அறிதலென்பது
யாருக்கும் வெறுப்பதேயில்லை,
தனதானது தெருமுனையில்
சிரிக்கப்படும் வரையிலும்!\\
நச்சென்று கூறியிருக்கிறீர்கள்,கவிதை அருமை:))
/நமக்கேன் வம்பு என
ஒதுங்கிச்செல்லும் கால்கள்கூட
காதுகள் கூர்மையாக்கியே நடக்க/
அழகான வரிகள்
வாங்க வாங்க கவிநயா.
எப்படி இருகீங்க?
வழக்கம் போல் ஊக்கம் மிகுந்த உங்கள் பின்னூட்டம் கண்டதில் மகிழ்ச்சி.
நன்றிகள் பல.
வாங்க வாங்க கவிநயா.
எப்படி இருகீங்க?
வழக்கம் போல் ஊக்கம் மிகுந்த உங்கள் பின்னூட்டம் கண்டதில் மகிழ்ச்சி.
நன்றிகள் பல.
வாங்க திவ்யா!
என் வலைப்பூவிற்கு தங்களை அன்போடு வரவேற்கிறேன்.
தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள்
வாங்க திகழ்மிளிர்..
நல்லபெயர்.. வாழ்த்துக்கள்..
என் வலைப்பூவிற்கு தங்களை அன்போடு வரவேற்கிறேன்.
தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள்
///ஒழுகிபோன ஒவ்வொரு அந்தரங்கமும்
ஆயிரம் முறைகள் பொழியும்
அடைமழையாய்!
செய்தித்தாள் துணுக்குகள் முதல்
குழாயடி பெண்களின் கிசுகிசு வரை
அரங்கேற்றத்துடனே அம்பலமாகின்றன
அவை!///
ஆஹா! மிகவும் அருமை. என்னைக் கவர்ந்த வரிகள் இவை.
தளத்தை வலம் வந்தேன். வாழ்த்துக்கள். அருமையான கவிதைகளை அடு(ட)க்கி வைத்திருக்கிறீர்க்கள்.
அன்புடன்
சேவியர்
ரொம்ப தேங்க்ஸ் நட்சத்ரா!
வழக்கம் போல் உங்க ஊக்கம் என்னை மகிழ்விக்கிறது
நன்றிகள் நண்பனே ரிஷான்.
வாங்க அகரம் அமுதா..
தங்களின் பிப்ன்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்!
வாங்க அகரம் அமுதா..
தங்களின் பிப்ன்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்!
வாங்க சேவியர்..
தாங்கள் என் வலைத்தளம் வந்ததில் மிக்க மகிழ்ச்சி..
தங்களின் நேரத்திற்கும், மேலான பின்னூட்டங்கள் என் நன்றிகள்!!
வாங்க சேவியர்..
தாங்கள் என் வலைத்தளம் வந்ததில் மிக்க மகிழ்ச்சி..
தங்களின் நேரத்திற்கும், மேலான பின்னூட்டங்கள் என் நன்றிகள்!!
//அந்தரங்கம் அறிதலென்பது
யாருக்கும் வெறுப்பதேயில்லை,
தனதானது தெருமுனையில்
சிரிக்கப்படும் வரையிலும்!//
உண்மை. உண்மை.
//அந்தரங்கம் அறிதலென்பது
யாருக்கும் வெறுப்பதேயில்லை,
தனதானது தெருமுனையில்
சிரிக்கப்படும் வரையிலும்!//
எதார்த்ததின் உண்மைகள் :)
கோகுலன்,
அந்தரங்கம் அறிதலென்பது மனித இயல்பு. அது தவறா சரியா என வாதிடவில்லை.
அந்தரங்கங்களை முடிந்த வரை காப்பாற்றிக் கொள்வதென்பது அவரவர் பொறுப்பு. நாம் நண்பர்களுக்குச் சொல்வதெல்லாம் - காதில் விழுந்த-வந்த அந்தரங்கங்களை வாய் வழியே வெளியேற்றாதீர். அது போதும்.
நிற்க கவிதை அருமை. சிந்தனை அருமை. நடைமுறைப்படுத்துதல் சிரமம்.
அற்புதமான வரிகள் நண்பா. அந்தரங்கம் பேசுபவருக்குத் தெரிவதில்லை தன்னைப் பற்றி எங்கோ யாரோ பேசுகிறார்களென்று.
நல்ல கவிதை. அழகாக எழுதுகிறீர்கள்.
அனுஜன்யா
"அந்தரங்கம் அறிதலென்பது " அருமையான கவிதை .
உங்களால் இன்னும் சிறப்பாக எழுதமுடியும் என எண்ணுகிறேன் .
Post a Comment