Welcome!


யாருமற்றதொரு பொழுதில்

2:41 PM Edit This 19 Comments »


அழகான என் கவிதையை
வாசிக்க ஆளில்லையென
கவலையாய் நான் திரும்புகையில்
படபடத்தபடியே படித்துப்போகிறது
ஜன்னல் வழி வந்த தென்றல்!

- - o 0 o - -

வீடுமுழுவதும் நிறைந்துகிடக்கும்
மௌனத்தின் திடத்தை
கிழித்துக்கொண்டிருக்கிறது
குளியலறையில் சொட்டுகின்ற
திரவக்கவிதை!

- - o 0 o - -

முற்றத்தில் இருந்ததைவிடவும்
அழகாயிருக்கிறது
பக்கத்துவீட்டு குழந்தையின்
காலிலொட்டி வீட்டுக்குள் வந்த
கோலத்தின் வர்ணப்பொடி!

- - o 0 o - -

சென்றவருடத்தில் பொரிந்த
குருவிக்குஞ்சுகளின் குரல்
இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது
தாழ்வாரத்தின் வைக்கோல் மட்டுமுள்ள
வெற்று குருவிக்கூட்டில்..

- - o 0 o - -

பின்முற்றத்தில்
காக்கைக்கு வைக்கப்பட்ட சாதத்தில்
அமைதியாய் மொய்த்துக்கிடக்கின்றன
உன் நினைவுகளையொத்த எறும்புகள்!

- - o 0 o - -

19 comments:

கவிநயா said...

அருமை, கோகுலன்! உங்க ரசனையை வியக்காமல் இருக்க முடியல! அதை அழகாக வார்த்தையில கொண்டு வந்துடறீங்க :) எதுன்னு எடுத்துச் சொல்ல முடியல. எல்லாமே அழகு - க்யூட் நாய்க்குட்டியையும் சேர்த்து!

எம்.ரிஷான் ஷெரீப் said...

//முற்றத்தில் இருந்ததைவிடவும்
அழகாயிருக்கிறது
பக்கத்துவீட்டு குழந்தையின்
காலிலொட்டி வீட்டுக்குள் வந்த
கோலத்தின் வர்ணப்பொடி!//

முழுக்கவிதையின் ஒவ்வொரு பத்தியிலும் அழகழகான சிறுகவிதைகள்..!

அருமை கோகுலன் :)

Natchatra said...

ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ச்சுவீட்....
வேறென்ன சொல்ல தெரியல கண்ணா...எந்த வரின்னு சொல்ல முடியல அத்தனையும் அட்டகாசம்...

அன்புடன்

நட்சத்திரா...

சகாராதென்றல் said...

//முற்றத்தில் இருந்ததைவிடவும்
அழகாயிருக்கிறது
பக்கத்துவீட்டு குழந்தையின்
காலிலொட்டி வீட்டுக்குள் வந்த
கோலத்தின் வர்ணப்பொடி!//

எல்லாக் கவிதைகளுமே நெஞ்சை அள்ளுகின்றன. குறிப்பாக இந்தக் கவிதை, எங்கள் வீட்டில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை கண்முன்னே நிறுத்தியது. அழகு!!

Gokulan said...

ரொம்ப நன்றீங்க கவிநயா..

Gokulan said...

நன்றி ரிஷான்...:))

Gokulan said...

வாங்க சகாராதென்றல்..

என் வலைப்பூவிற்கு முதலாக வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்..

மிக்க மகிழ்ச்சி..

பின்னூட்டத்திற்கு நன்றிகள்..:)

Gokulan said...

ரொம்ப நன்றீங்க நட்சத்ரா..

Gokulan said...

//அருமை, கோகுலன்! உங்க ரசனையை வியக்காமல் இருக்க முடியல! அதை அழகாக வார்த்தையில கொண்டு வந்துடறீங்க :) எதுன்னு எடுத்துச் சொல்ல முடியல. எல்லாமே அழகு - க்யூட் நாய்க்குட்டியையும் சேர்த்து!//

அதைவிட உங்க பின்னூட்டம் ரொம்ப க்யூட்.. :))

அகரம்.அமுதா said...

//அழகான என் கவிதையை
வாசிக்க ஆளில்லையென
கவலையாய் நான் திரும்புகையில்
படபடத்தபடியே படித்துப்போகிறது
ஜன்னல் வழி வந்த தென்றல்!//


//முற்றத்தில் இருந்ததைவிடவும்
அழகாயிருக்கிறது
பக்கத்துவீட்டு குழந்தையின்
காலிலொட்டி வீட்டுக்குள் வந்த
கோலத்தின் வர்ணப்பொடி!//

சின்னச் சின்ன நிகழ்வுகளைக்கூட கவிதையாக்குகிற தங்களின் ஆற்றல் என்னை வியக்கச் செய்கிறது.

ராமலக்ஷ்மி said...

என் பதிவிலே நீங்கள் சந்தித்துச் சென்ற ஜானிதான் குட்டியாக எட்டிப் பார்க்கிறதோ என்றெண்ணி சட்டென்று உள் வந்தேன். தங்கள் கற்பனை வளம் கண்டு பேச்சற்று நின்றேன்.

ராமலக்ஷ்மி said...

//முற்றத்தில் இருந்ததைவிடவும்
அழகாயிருக்கிறது
பக்கத்துவீட்டு குழந்தையின்
காலிலொட்டி வீட்டுக்குள் வந்த
கோலத்தின் வர்ணப்பொடி!//

ரசனை ரசனை!

ராமலக்ஷ்மி said...

//சென்றவருடத்தில் பொரிந்த
குருவிக்குஞ்சுகளின் குரல்
இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது
தாழ்வாரத்தின் வைக்கோல் மட்டுமுள்ள
வெற்று குருவிக்கூட்டில்..//

நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களின் ஞாபகங்கள் கூட சில சமயங்களில் இப்படித் துரத்தும் கோகுலன். நீங்கள் எதை நினைத்து எழுதினீர்களோ, எனக்கு எதை எதையோ நினைவு படுத்தி விட்டன இந்தக் கனமான வரிகள்.

குட்டி செல்வன்* said...

அழ‌காக‌ எழுதியிருக்கிறீர்க‌ள் :)

ஜுனைத் ஹஸனி said...

அருமையான கவிதை. விவரிக்க வார்த்தைகளில்லை. www.junaid-hasani.blogspot.com என்ற எனது வலைப்பதிவில் தங்களுடைய கருத்துக்களை பதிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Gokulan said...

நன்றிகள் குட்டி செல்வன்

Gokulan said...

//
சின்னச் சின்ன நிகழ்வுகளைக்கூட கவிதையாக்குகிற தங்களின் ஆற்றல் என்னை வியக்கச் செய்கிறது.//

மிக்க நன்றிகள் அகரம் அமுதா!

Gokulan said...

//நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களின் ஞாபகங்கள் கூட சில சமயங்களில் இப்படித் துரத்தும் கோகுலன். நீங்கள் எதை நினைத்து எழுதினீர்களோ, எனக்கு எதை எதையோ நினைவு படுத்தி விட்டன இந்தக் கனமான வரிகள்.//

உண்மைதான் தோழி!!

நன்றிகள்!

Gokulan said...

அன்பு நண்பரே ஜீனைத் ஹஸனி..
தங்களை அன்போடு வரவேற்கிறேன் ..

//
அருமையான கவிதை. விவரிக்க வார்த்தைகளில்லை. www.junaid-hasani.blogspot.com என்ற எனது வலைப்பதிவில் தங்களுடைய கருத்துக்களை பதிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//

நன்றிகள்!!
கண்டிப்பாக செய்கிறேன்..